விழுப்புரத்தில் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
விழுப்புரத்தில் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.;
விழுப்புரம்,
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் போலீசார், போலீஸ் நண்பர்கள் குழுவினர் பலர் கலந்துகொண்டு சாராயம் ஒழிப்பு குறித்த விளம்பர பதாகையை கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
இதில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், சதீஷ், பிரபு, போலீஸ் நண்பர்கள் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், அமைப்பாளர் ஆனந்த், தலைமை ஒருங்கிணைப்பாளர் லட்சுமிநாராயணன், இளம் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபுசெல்வத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.