சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: தலைமறைவாக இருந்த மேலும் 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில், 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-14 23:15 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜான்சன்(வயது 25) மற்றும் 18 வயது சிறுவன், இவர்களுடைய நண்பர் மருதவனத்தை சேர்ந்த சதாசிவம் மகன் கார்த்திகேயன்(28).

தனது நண்பர்களான ஜான்சன், 18 வயது சிறுவன் ஆகியோரை சந்திக்க அடிக்கடி கார்த்திகேயன் அவர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். அப்போது இவர்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அந்த சிறுமியுடன் கார்த்திகேயன் பழகி வந்துள்ளார். அப்போது ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை பார்த்த ஜான்சன் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 2 பேரும் இதை வெளியில் சொல்லி விடுவோம் என கூறி அந்த சிறுமியை மிரட்டியதுடன் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி 6 மாத கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

2 பேர் கைது

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி, ஏட்டு ராஜம் ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கார்த்திகேயன், ஜான்சன் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கார்த்திகேயனை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற இருவரும் தலைமறைவானார்கள். அவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஜான்சனும், 18 வயது சிறுவனும் அவர்களது உறவினர்கள் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று 2 பேரையும் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்