கோவில்பட்டி அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 6 மாணவ–மாணவிகள் காயம்
கோவில்பட்டி அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 6 மாணவ–மாணவிகள் காயம் அடைந்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 6 மாணவ–மாணவிகள் காயம் அடைந்தனர்.
பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்திதோப்பு கிராமத்தில் இந்து தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும், வழக்கம்போல் மாணவ–மாணவிகளை வேனில் ஏற்றி, அவர்களது வீடுகளுக்கு அழைத்து சென்றனர். கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி பகுதியில் உள்ள மாணவ–மாணவிகளை ஏற்றிக் கொண்டு, பள்ளிக்கூட வேன் புறப்பட்டு சென்றது. அந்த வேனை மந்திதோப்பைச் சேர்ந்த லோகநாத பாரதி மகன் பீமா பாரதி (33) ஓட்டிச் சென்றார்.
கோவில்பட்டி–குருமலை ரோடு தனியார் சேமியா தொழிற்சாலை அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேன் தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனின் இடுபாடுகளுக்குள் சிக்கிய மாணவ–மாணவிகள் கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
6 மாணவ–மாணவிகள் காயம்
இந்த விபத்தில் வேனில் இருந்த மாணவர் ரகுபாலன் (6), மாணவிகள் லட்சுமி (7), மதுஸ்ரீ (8), பூஜாஸ்ரீ (7), அந்தோணி ரெஜிஸ் (14), அந்தோணி ஜெனிஸ் (12) ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அனைவரும் வீடு திரும்பினர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.