போதை ஊசிகள் விற்பனை; 3 வாலிபர்கள் கைது
போதை ஊசிகள் விற்பனை செய்ததாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாலிபர்கள் போதை ஊசி பயன்படுத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில் தனிப்படை அமைத்து, திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதை ஊசிகள் பயன்பாடு உள்ளதா என சோதனை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையிலான தனிப்படை போலீசார் திருக்கோகர்ணம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் பாரதி நகரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 22), மறவபட்டியை சேர்ந்த அஜித்குமார் (23), சாந்தநாதபுரம் 4-ம் வீதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (19) ஆகியோர் போதை ஊசிகளை பயன்படுத்தி வருவதும், அவர்கள் பிறருக்கு விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் வெங்கடேஷ், அஜித்குமார், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து போதை ஊசி, மாத்திரைகள் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.