வெ.விரகாலூர்- தெற்கு தேளூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
அரியலூர் மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டில் சம்பா பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரியலூர் தாலுகாவில் வெ.விரகாலூர் மற்றும் தெற்கு தேளூர் ஆகிய 2 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. எனவே, அருகில் உள்ள விவசாய பெருமக்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.