மனுநீதி திட்ட முகாம்; 17–ந் தேதி நடக்கிறது

மாதவலாயத்தில் மனுநீதி திட்ட முகாம் 17–ந் தேதி நடக்கிறது.

Update: 2020-03-14 22:15 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தோவாளை தாலுகா மாதவலாயம் வருவாய் கிராமம் மாதவலாயத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டரின் சிறப்பு மனுநீதித் திட்ட முகாம் வருகிற 17–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து குமரி மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டரால் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே மாதவலாயம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்