காயல்பட்டினத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
காயல்பட்டினத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கிரிக்கெட் போட்டி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் 40 அணிகள் கலந்து கொண்டன. தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், நகர செயலாளர் முத்து முகமது, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், நகர இளைஞர் அணி அமைப்பாளர் கலீலூர் ரஹ்மான், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுதாகர், அனஸ், பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் இலியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு
இதேபோன்று நாசரேத்தில் 39 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியும், உமரிக்காட்டில் 38 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியும் தொடங்கியது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், மதுரையில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.
மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும். இதில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.5 லட்சம் மற்றும் தங்க கோப்பை பரிசாக வழங்கப்படுகிறது.