மது, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பொம்மிகுப்பத்தில் மது, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2020-03-14 22:15 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அருகே உள்ள பொம்மிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சார்பில் மது, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமைஆசிரியை தமிழ்ச்செல்வி, ராதா ஆகியோர் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் கிராமம் முழுவதும் சென்றது.

ஊர்வலத்தின் போது, மது, பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு, கோ‌ஷங்கள் எழுப்பி சென்றனர். இதில் கிராம நிர்வாக அலுவலர் பூ.வேலு, வக்கீல் ஜெகதீஸ்வரன், பிரபு, மேகலா, லெமூரியா, திட்ட பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி சமூகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சந்துரு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்