சிக்னல் கோளாறு: எழும்பூர்-பூங்கா இடையே மின்சார ரெயில்கள் சேவை பாதிப்பு பயணிகள் அவதி
எழும்பூர்-பூங்கா ரெயில் நிலையங்களுக்கு இடையே திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு நேற்று காலை வழக்கம் போல் மின்சார ரெயில்கள் இயங்கி கொண்டிருந்தது. இந்தநிலையில் எழும்பூர்-பூங்கா ரெயில் நிலையங்களுக்கு இடையே திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. வெகு நேரமாகியும் சிக்னல் கோளாறு சரிசெய்யப்படாததால், பயணிகள் மின்சார ரெயில்களைவிட்டு இறங்கி, தண்டவாளத்தில் நடக்க ஆரம்பித்தனர். பின்னர் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. 20 நிமிட தாமதத்துக்கு பிறகு மீண்டும் மின்சார ரெயில் சேவை தொடங்கியது. இதனால் காலை வேளையில் அலுவலகத்துக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர்.