சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு திருச்சி வழியாக சென்ற ராணுவ ஹெலிகாப்டர்கள்
சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு திருச்சி வழியாக சென்ற ராணுவ ஹெலிகாப்டர்கள்.
செம்பட்டு,
சென்னை அரக்கோணம் விமானப்படை தளத்தில் இருந்து ராமேசுவரம் வரை ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர்கள் ஒவ்வொரு மாதமும் ஒருமுறை இயக்கப்படுவது வழக்கம். ராணுவ பயிற்சிக்காக அந்த ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு இயக்கப்பட்ட 5 ஹெலிகாப்டர்கள் நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்தன. இந்த ஹெலிகாப்டர்கள் காலை 8 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் இறங்கின. எரிபொருள் நிரப்பப்பட்ட பிறகு மீண்டும் காலை 9.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து அந்த ஹெலிகாப்டர்கள் புறப்பட்டு ராமேசுவரம் நோக்கி சென்றன. மீண்டும் அவை அங்கிருந்து சென்னை அரக்கோணத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது.