பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்; நாளை நடக்கிறது
உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறவுள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் தாலுகா ஈச்சம்பட்டி, குன்னம் தாலுகாவில் குன்னம், வேப்பந்தட்டை தாலுகாவில் தொண்டப்பாடி, ஆலத்தூர் தாலுகா திம்மூர் ஆகிய கிராமங்களில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதேபோல் அரியலூர் தாலுகா நாகமங்கலம், உடையார்பாளையம் தாலுகா நாயகனைப்பிரியாள், செந்துறை தாலுகா விளந்தை (தெற்கு), ஆண்டிமடம் தாலுகா சிலம்பூர் (தெற்கு) ஆகிய கிராமங்களிலும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
முகாமில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காணப்படும். முகாமினை வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள்.
முகாமில் கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), ரத்னா (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.