பாளையங்கோட்டையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கட்டிட காண்டிராக்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

கட்டிட காண்டிராக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-03-12 21:30 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டிட காண்டிராக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை 

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் கமலதாசன் (வயது 49). கட்டிட காண்டிராக்டர். இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு வீடு கட்டி கொடுக்கும் பணியை செய்து வந்தார்.

இதற்காக அந்த பெண்ணின் வீட்டுக்கு அவ்வப்போது சென்று வந்தார். அப்போது அந்த பெண்ணின் 5 வயது மகளுக்கு கமலதாசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு 

இதுகுறித்து அந்த பெண் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, கமலதாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்