தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்
தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உப்பாற்று ஓடை
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதி விவசாயிகள் கூட்டம் அத்திமரப்பட்டி விவசாய சங்க கட்டிடத்தில் நடந்தது. விவசாய சங்க தலைவர் அழகுராஜா ஜெபராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சேகர், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உப்பாற்று ஓடையின் இருபக்க கரைகளிலும் தனியார் ஆக்கிரமிப்புகளும் மற்றும் கரை உயரம் இல்லாமலும், பலம் இல்லாமலும் உள்ளது. இந்த நிலையில் உப்பாற்று ஓடையின் கரைகளை பலப்படுத்தும் விதமாக கரைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். அதற்கு முன்பு உப்பாற்று ஓடையில் தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
குழு அமைப்பு
கரைகள் சீரமைப்பு பணிகளை கண்காணித்து ஆலோசனை வழங்கும் விதத்தில் 6 விவசாயிகள் தலைமையிலான கண்காணிப்பு குழுக்களை அமைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஜோதிமணி, வியாபாரிகள் சங்க மாநில துணைத்தலைவர் பொன் தனகரன், விவசாயிகள் திருமால், நம்மாழ்வார், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.