ராஜபாளையத்தில் பரிதாபம்: வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை

ராஜபாளையத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-03-11 22:15 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பராஜா தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அந்த பகுதியில் பலசரக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் முத்துக்குமார் (வயது 29).

என்ஜினீயரிங் படித்து முடித்த முத்துக்குமார் வேலை கிடைக்காமல் பலசரக்கு கடையில் உதவியாளராக வேலை செய்து கொண்டிருந்தார். மேலும் உடல்நலமும் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

வேலை கிடைக்காததோடு உடல் நலமும் பாதிக்கப்பட்டதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்துக்குமார் வீட்டு மாடிக்கு சென்று தூக்குப்போட்டு கொண்டார்.

மாலையில் தந்தை செல்வராஜ் வீட்டிற்கு சாப்பிட சென்ற மகனை காணவில்லை என தேடிப்பார்த்துள்ளார். மாடிக்கு சென்று பார்த்தபோது முத்துக்குமார் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

உடனே ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், முத்துக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்