அனந்தபுரம் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்

அனந்தபுரம் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 144 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2020-03-10 22:15 GMT
கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் ஊராட்சியில் ஆரணி கோட்டாட்சியர் மைதிலி தலைமையில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி, ஒன்றிய கவுன்சிலர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போளூர் தாசில்தார் ஜெயவேலு வரவேற்றார்.

முகாமில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., 144 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், ‘12 ஆண்டுகளாக சீரமைக்காமல் இருந்த செண்பகத்தோப்பு அணையின் ‌‌ஷட்டர்கள் தற்போது ரூ.16 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. கல்பட்டு கிராமத்தில் புதிதாக துணைமின் நிலையம் அமைக்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.

இதில் டி.வி.எஸ். கள இயக்குனர் பொன்னுரங்கம், வாழியூர் அரசு மருத்துவர் கிரிதர், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் தஞ்சியம்மாள், சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் கணபதி, கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலிங்கம், பாலாஜி, முன்னாள் கவுன்சிலர் ரகு, ஊராட்சி செயலாளர்கள் அன்பழகன், சேகர் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்