அடுப்பில் மண்எண்ணெய் ஊற்றும் போது தீக்காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி சாவு

திருவண்ணாமலை அருகே அடுப்பில் மண்எண்ணெய் ஊற்றும் போது தீக்காயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-03-10 21:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே கீழ்நாத்தூரை சேர்ந்தவர் தனஞ்செழியன் (வயது 42). இவரது மகள் மேனகா (10). இவள் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 8-ந் தேதி இரவு 7 மணியளவில் மேனகா வீட்டில் இருந்த அடுப்பில் மண்எண்ணெயை ஊற்றி கொண்டிருந்தாள். அப்போது சிறுமியின் ஆடையில் தீ பிடித்தது. இதில் தீக்காயம் அடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்