ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் பகுதிகளில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-03-10 22:00 GMT
ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் பகுதிகளில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

மகளிர் தின விழா 

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. எப்போதும்வென்றான் வருவாய் ஆய்வாளர் கீதா தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர்கள் மாரியம்மாள், கனகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு கலந்து கொண்டு கேக் வெட்டி அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கினார்.

விழாவில் மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி, வட்ட வழங்கல் துணை தாசில்தார் செல்வக்குமார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ஆனந்த், ஓட்டப்பிடாரம் வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒட்டநத்தத்தில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் சரிதா தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் வட்டார மகளிர் திட்டம் ஒருங்கிணைப்பாளர் சுதா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மணியாச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் கலந்து கொண்டு பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஊர்க்காவலபெருமாள், தூய்மை பாரதம் மாவட்ட பயிற்றுனர் அதிசயமணி, பஞ்சாயத்து துணைத்தலைவர் கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் நல்லசாமி, கிருஷ்ணவேணி, மாரியம்மாள், மகேசுவரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம் 

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய தலைவர் முனியசக்தி ராமசந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்