வால்பாறை, கேரள வனப்பகுதியில் கடும் வெப்பம்: அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்தது
வால்பாறை மற்றும் கேரள வனப்பகுதிகளில் கடுமையான வெப்பம் காரணமாக அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்தது.
வால்பாறை,
வால்பாறை பகுதியிலும் வால்பாறையிலிருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதிகளிலும் கடுமையான வெப்பம் நிலவி வருவதாலும் கோடைகாலம் தொடங்கி விட்டதாலும் ஆறுகள், ஓடைகளில் தண்ணீர் வற்றிப் போகத் தொடங்கிவிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வருவதற்கு முக்கிய காரணமாக விளங்கும் கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீரின் அளவு குறைந்து விட்டதால் அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் வெகுவாக குறைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறை நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும்,வால்பாறையிலிருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் உள்ள வனப்பகுதிகளிலும் கடந்த ஒருவாரமாக அவ்வப்போது லேசானமழையும்,சில சமயங்களில் கனமழையும் பெய்துவருகிறது.
இந்த மழை நீடித்தால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.