குன்றத்தூர் பகுதியில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
குன்றத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்த தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
பூந்தமல்லி,
தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், குன்றத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என்பது குறித்து தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து குன்றத்தூர் பேரூராட்சி அதிகாரி வெங்கடேசன் தலைமையில் நேற்று அப்பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்த போது, அங்கிருந்த கடைகளிலிருந்து சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கடைகளில் பிளாஸ்டிக் வைத்து விற்பனை செய்த வியாபாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்
இதையடுத்து, தினந்தோறும் 5 பேர் கொண்ட குழுவினர் அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும்,
பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை கண்டு பிடித்து அந்த இடத்திலேயே அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்றும், சாலையோரம் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்களுக்கு
அபராதம் விதிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.