விவசாயி மர்ம சாவில் திடீர் திருப்பம்: கணவரை அடித்து கொலை செய்த மனைவி கைது
தர்மபுரி அருகே விவசாயி மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரை மனைவியே அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள மேல் ஆண்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 32). விவசாயி. இவருடைய மனைவி கீதா (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று முனியப்பன் தோட்டத்தில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். கிருஷ்ணாபுரம் போலீசார், முனியப்பனின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே முனியப்பன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவருடைய உறவினர்கள் கிருஷ்ணாபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திடீர் திருப்பமாக முனியப்பனை, அவருடைய மனைவி கீதா அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மனைவி கைது
அப்போது முனியப்பனுக்கும், கீதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு 5 ஆண்டுகளுக்கு முன்பு கீதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். பெரியவர்கள் அவரை சமாதானம் செய்ததால் கடந்த 3 மாதங்களுக்கு முன் மீண்டும் முனியப்பனின் வீட்டுக்கு கீதா வந்துள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி ஏற்பட்ட தகராறில் கீதா முனியப்பனை அடித்து கொலை செய்து உடலை தோட்டத்தில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கீதாவை கைது செய்தனர். கணவரை, மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.