வெளிநாடு செல்ல மக்கள் பிரதிநிதிகள் மத்திய உள்துறை அனுமதி பெற வேண்டும் கவர்னர் கிரண்பெடி தகவல்

புதுச்சேரி மக்கள் பிரதிநிதிகள் வெளிநாடு செல்ல மத்திய உள்துறையின் அனுமதி பெற வேண்டும் என கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-08 00:28 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பற்றிய விவரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் இருந்து சில முன்மொழிவுகள் வரப்பெற்றுள்ளன.

அதன்படி கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்பயணங்களில் மூன்றில் ஒரு பங்கு பயணத்துக்கு மட்டுமே இந்த ஆண்டில் அனுமதி அளிக்கப்படும். எனவே வெளிநாடு செல்லும் மக்கள் பிரதி நிதிகள், அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியை பெற வேண்டும்.

உள்துறை அமைச்சக அனுமதி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கிய மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் இது பொருந்தும். மக்கள் பிரதிநிதிகள் அரசு பயணம் மட்டுமின்றி, தனிப்பட்ட பயணங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும்.

அனைத்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் நோக்கத்தை மத்திய அரசு அறிந்துகொள்ளும் வகையிலும், அரசு நிதியை சிக்கனப் படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கையை மத்திய உள்துறை எடுத்துள்ளது. இந்த உத்தரவை புதுச்சேரி கவர்னர் மாளிகை வரவேற்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்