ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு
ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் விரைவில் தொடங்கப்படும் என்று ரெட்டிச்சாவடியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எம்.சி. சம்பத் பேசினார்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ரெட்டிச்சாவடியில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தெய்வ பக்கிரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவி, சுகுமாறன், ராபர்ட், தெய்வேந்திரன், தங்கமணி, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி. சம்பத் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பல்வேறு திட்டங்களை வழங்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் வாழ்வாதாரம் நிலைத்து நிற்பதற்கு காவிரி பாதுகாப்பு மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டத்தில் 50 லட்சம் டன் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. இது பாதிக்கக்கூடாது என்பதற்காக காவிரி பாதுகாப்பு மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட மாசு ஏற்படுத்தக்கூடிய எந்த திட்டமும் இங்கு செயல்படாது.
கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில தாலுகாக்கள் காவிரி பாதுகாப்பு மண்டலத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிஞ்சிப்பாடி தாலுகா காவிரி பாதுகாப்பு மண்டலத்தில் இணைக்கப்படாத காரணத்தினால் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனால் கடலூர் மாவட்டம் வளர்ச்சி அடைவதோடு தமிழகத்திற்கு அந்நிய நேரடி முதலீடு வருவதால் பெரும் பயனுள்ளதாக அமையும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சாதாரணமாக நினைத்தார். ஆனால் இந்த 3 வருட எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் என்ன குறைகளை கண்டு உள்ளார். தேர்தல் எந்த கட்டத்தில் வந்தாலும் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் அவர்களை பெரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக இலக்கிய அணி துணை செயலாளர் சேகர், தலைமை கழக பேச்சாளர் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் குமரன், துணைத்தலைவர் சேவல் குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், மாவட்ட கவுன்சிலர்கள் கல்யாணி ரமேஷ், தமிழ்ச்செல்வி ஆதிநாராயணன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அழகானந்தம், முன்னாள் கவுன்சிலர் கந்தன், சுனில் பழனிசாமி, கொஞ்சிக்குப்பம் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.