சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் நடத்த அனுமதி வழங்க வேண்டும் ராணுவ மந்திரியிடம் எடியூரப்பா கோரிக்கை
மத்திய ராணுவ மந்திரியை நேரில் சந்தித்து பேசிய எடியூரப்பா, சர்வதேச விமான கண்காட்சியை பெங்களூருவில் நடத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பெங்களூரு,
மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கை டெல்லியில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் எடியூரப்பா ஒரு ேகாரிக்கை மனு கொடுத்தார்.
அதில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெங்களூருவில் விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் நடைபெற்றது.
சர்வதேச விமான கண்காட்சி
அப்போது அந்த கண்காட்சி உத்தரபிரதேசத்திற்கு இடம் மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அப்போது முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அந்த விமான கண்காட்சி பெங்களூருவிலேயே நடத்தப்பட்டது.
அடுத்த ஆண்டு (2021) 13-வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் நடைபெற வேண்டும். இதற்கு அனுமதி வழங்கி அதற்கான தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்” என்றார்.
மெட்ரோ ரெயில் திட்டம்
மேலும் பெங்களூரு ெவல்லார் சந்திப்பில் பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்காக ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை ஒதுக்குமாறும் எடியூரப்பா கேட்டுக் கொண்டார்.