பெரியவரப்பாளையம் காலனியில் குளத்தில் கலக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
பெரியவரப்பாளையம் காலனியில் குளத்தில் கலக்கும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நட வடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் ஒன்றியம், புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி, பெரியவரப்பாளையம் கிராமம் மதுரைவீரன் கோவில் அருகே உள்ள காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சிறியகுளம் ஒன்று உள்ளது. இக்குளத்தில் உள்ள நீரை அப்பகுதி பொதுமக்கள், குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், சமீபத்தில் பெய்த மழையால் குளம் நிரம்பியது.
பொதுமக்கள் கோரிக்கை
இந்தநிலையில் இப்பகுதியில் வசிக்கும் சிலர் தங்களது வீடுகளில் உள்ள கழிவுநீரை குளத்தில் விடுகின்றனர். மேலும் சிலர் குப்பைகளை கொட்டி விடுகின்றனர். இதனால் குளத்தில் துர்நாற்றம் வீசி பாசிபடர்ந்து, பிளாஸ் டிக் கழிவுகள் மிதக்கிறது. குளத்தில் கலக்கும் கழிவு நீரால் அப்பகுதி பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் குளத்தை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குளத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.