திசையன்விளை அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
திசையன்விளை அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
திசையன்விளை,
திசையன்விளை அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
திசையன்விளை அருகே உள்ள மடத்தச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமாடன். அவருடைய மகன் சந்திரன் (வயது 46). கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.
இந்தநிலையில் சந்திரன் கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி ஜெயா கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தூக்கு போட்டு தற்கொலை
இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த சந்திரன் வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பற்றி திசையன்விளை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சந்திரனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.