தூத்துக்குடி மாவட்டத்தில் க.அன்பழகன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2020-03-07 22:30 GMT
கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி 

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, விவசாய அணி அமைப்பாளர் ராமர், வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் சேதுரத்தினம், ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், மாவட்ட துணை செயலாளர் பவுன் மாரியப்பன், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் பொன் ஸ்ரீராம்,

இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ஜோதிபாசு, முஸ்லிம் லீக் நகர தலைவர் காஜா மைதீன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் திருப்பதி ராஜா, சிவாஜி மன்ற தலைவர் சுப்புராயலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி 

உடன்குடி மெயின் பஜார், பஸ் நிலையம், வில்லிகுடியிருப்பு சந்திப்பு ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட க.அன்பழகனின் உருவப்படத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளரும், உடன்குடி யூனியன் தலைவருமான பாலசிங் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் ஜான் பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சிராஜூதீன், நகர அவை தலைவர் திரவியம், பொருளாளர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடன்குடி மெயின் பஜாரில் ஒன்றிய, நகர ம.தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்ட க.அன்பழகனின் உருவப்படத்துக்கு ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சாத்தான்குளம்–எட்டயபுரம் 

சாத்தான்குளம் பழைய பஸ் நிறுத்தம் அருகில் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் மகா இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் அருகில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் பாரதி கணேசன், மாவட்ட பிரதிநிதி பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்