மைனர் பெண் கடத்தி கற்பழிப்பு வாலிபருக்கு ஆயுள் தண்டனை கலபுரகி மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு

மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வழக்கில், வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கலபுரகி மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2020-03-06 22:30 GMT
கலபுரகி, 

கலபுரகி மாவட்டம் மட்போல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய்குமார் என்ற சஞ்சு (வயது 25). இவர், அதே பகுதியில் வசிக்கும் ஒரு மைனர் பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. மேலும் அவரை திருமணம் செய்வதாகவும் சஞ்சய்குமார் கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மைனர் பெண்ணை தமிழ்நாடு கிருஷ்ணகிரிக்கு கடத்தி சென்று சஞ்சய்குமார் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மட்போல் போலீஸ் நிலையத்தில் மைனர் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சஞ்சய்குமாரை கைது செய்திருந்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கலபுரகி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது மைனர் பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் கூறி, அவரை கடத்தி சென்று கற்பழித்தது ஆதாரத்துடன் நிரூபணமானதால் சஞ்சய்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையில் ரூ.75 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்