தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 372 பேருக்கு பணிநியமன ஆணை

குளித்தலையில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 372 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.;

Update: 2020-03-06 22:15 GMT
குளித்தலை, 

கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அய்யர்மலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. 

முகாமை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) ராதிகா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் வேலை வாய்ப்பு முகாம் குறித்தும், போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது குறித்தும் அவர் விளக்கி பேசினார். அரசு கலைக்கல்லூரி முதல்வர் மாரியம்மாள் முன்னிலை வகித்தார். 

முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனத்தினர் பங்கேற்று வேலைவாய்ப்புக்காக வந்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில், 372 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 

இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

முன்னதாக முகாமின் வேலை வாய்ப்பு அலுவலரும், அரசு கலைக்கல்லூரி பேராசிரியருமான அன்பரசு வரவேற்றார்.

 முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை வேலைவாப்பு அலுவலர் சரண்யா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்