அசூர் அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் கவலை
அசூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படாமல் 30 ஆயிரம் மூட்டை நெல் தேங்கி இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
துவாக்குடி,
திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பத்தாளப்பேட்டை, தேனீர்பட்டி, வேங்கூர், கூத்தைப்பார், அசூர் ஆகிய இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலங்களில் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்து வருகிறார்கள்.
இங்கு ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கு ரூ.1,905-ம், மோட்டா ரகத்துக்கு ரூ.1,865-ம் வழங்கப்படுகிறது. ஒரு மூட்டை 41 கிலோ 200 கிராம் வைத்து பிடிக்கப்படுகிறது. இதற்கு கூலியாக ரூ.30 முதல் ரூ.35 வரை வசூலிக்கப்படுகிறது. அசூர் நெல் கொள்முதல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
30 ஆயிரம் மூட்டைகள் தேக்கம்
இந்தநிலையில் இந்த பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அசூர் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டுவரப்பட்ட சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் கடந்த 20 நாட்களாக கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 800 மூட்டை வீதம் 16 ஆயிரம் மூட்டை நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதனால், விவசாயிகள் கொண்டு வந்த நெல் ஆங்காங்கே கொட்டப்பட்டு தார்பாய் போடப்பட்டு உள்ளது. மேலும் வெயிலில் நெல் மூட்டைகள் கிடப்பதால் நெல் மூட்டைகளின் எடை குறையும் என்றும், மேலும் பருவ நிலை மாற்றத்தால் மழை பெய்தால் கொள்முதல் செய்யப்படாத நெல் அனைத்தும் மழையில் நனைந்து ஈரமாகி விடும் என்றும், ஈரமான நெல்லை அரசு கொள்முதல் செய்யமாட்டார்கள் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கூடுதலாக திறக்க வேண்டும்
இந்தநிலையில், தமிழ்நாடு விவசாய சங்க திருவெறும்பூர் வட்டார தலைவர் சங்கிலிமுத்து தலைமையில் விவசாயிகள் நேற்று அசூர் நெல்கொள்முதல் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்த அலுவலர்களிடம் இதுபற்றி முறையிட்டனர். அப்போது இங்கு 15 பேர் கொண்ட ஊழியர்கள் நெல் கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து நெல்லும் கொள்முதல் செய்யப்படும் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இங்கு உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு 2 மாத காலம் ஆகும். தற்போது அறுவடை பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் நெல் வரத்தும் அதிகரிக்கும். எனவே, கூடுதல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.