வெறிநாய்கள் கடித்து கறவைமாடுகள் பாதிப்பு: கீரமங்கலம் பகுதியில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அதிகாரிகள் தகவல்
வெறிநாய்கள் கடித்து கறவைமாடுகள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து கீரமங்கலம் பகுதியில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிகின்றன.இந்த நாய்கள் அப்பகுதியில் உள்ள ஆடு,மாடுகளை கடித்து குதறி விடுகின்றன. கடந்த மாதம் கொத்தமங்கலத்தில் 25 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கடித்து குதறியதில் அவைகள் செத்தன. இதேபோல கீரமங்கலம் அருகில் செரியலூர் கிராமத்தில் கடந்த வாரம் ஒரு வெறிநாய் 7-க்கும் மேற்பட்ட கறவை மாடுகள், பல ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இந்நிலையில் வெறிநாய்கள் கடித்து பாதிக்கப்பட்டுள்ள சில கறவை மாடுகளில் பால் கறந்து பால் விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பாலை குடித்த பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி உள்ளது. இதனால் செரியலூர் பகுதியில் பால் விற்பனையாளர்களிடம் இருந்து பால் வாங்கி குடித்த குழந்தைகள், பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
சிறப்பு மருத்துவ முகாம்
இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் சுகாதார நிலைய அலுவலர் டாக்டர் சித்ராதேவி மற்றும் ஆவின் அதிகாரிகள், செரியலூர் இனாம் ஊராட்சி மன்ற தலைவர் ஜியாவுதீன் தலைமையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது அதிகாரிகள், நாய் கடித்த பசுமாட்டு பால் குடிப்பதால் கிருமிகள் பரவாது என்றும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் விரைவில் கீரமங்கலம் பகுதியில் செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில், நாய் கடித்த கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினர். அப்போது செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.