தலையில் கல்லைப்போட்டு வக்கீல் கொலை நண்பர்கள் கைது
தலையில் கல்லை தூக்கிப்போட்டு வக்கீல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு விஜயாபுரம் திருமண மண்டபம் அருகே, 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் அழகு தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ரத்த காயங்களுடன் கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த வாலிபரின் சட்டைப் பையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் அடையாள அட்டை வைத்திருந்தார். அதில் அவர், நெல்லையைச் சேர்ந்த ராகவ்(வயது 27) என்பதும், வக்கீல் என்பதும் தெரியவந்தது. அவருடைய செல்போனில் இறுதியாக பேசிய நபருக்கு போலீசார் அழைத்தபோது, இறந்து கிடந்தவர் ராகவ்தான் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
ராகவ், சித்தாலப்பாக்கத்தில் உள்ள தனது நண்பர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றதும் தெரியவந்தது. பின்னர் சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர் 4-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் குடிபோதையில் இருந்த அரியலூரை அடுத்த உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கரிகாலன்(23), தென்காசியைச் சேர்ந்த ரமணன்(24) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதில் என்ஜினீயரான ரமணன், கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், கரிகாலன் என்ஜீனியர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருவதும் தெரிந்தது. மேலும் போலீசாரிடம் இருவரும் கூறியதாவது:-
எங்களை சந்திக்க நண்பர் ராகவ் வந்தார். 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மதுபானம் அருந்தியபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் வேங்கைவாசல் அருகே உள்ள மதுபான கடையில் மது வாங்கி அருந்தியபோது மீண்டும் ராகவ், எங்களை தாக்கியதால் கோபம் கொண்டு மாம்பாக்கம் சாலையில் வைத்து அவரை பீர் பாட்டிலால் தாக்கினோம். பின்னர் அங்கிருந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.