கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது வழக்கு; கலெக்டர் கே.பி.சிவக்குமார் எச்சரிக்கை

சிவமொக்கா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கலெக்டர் கே.பி.சிவக்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.;

Update: 2020-03-05 22:15 GMT
சிவமொக்கா, 

சீனாவை கொரோனா வைரஸ் உலுக்கி வந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரசால் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து இந்தியாவிலும் கொரோனா வைரசால் 28 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூருவில் தங்கி இருந்து பணியாற்றி வந்த ெதலுங்கானாவை சோ்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவருக்கும் கொேரானா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் கா்நாடக மக்கள் கொரோனா வைரஸ் பீதியில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சிவமொக்காவில், மாவட்ட கலெக்டர் கே.பி. சிவக்குமார், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சிவமொக்கா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசியதாவது:-

சிவமொக்கா மாவட்டத்தில் இதுவரை யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்று யாராவது தவறாக தகவல் பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்படும்.

சிவமொக்காவுக்கு சுற்றுலா வரும் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்த கொரோனா வைரசுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சிவமொக்கா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் 6 படுக்கைகள் கொண்ட தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் 24 மணி நேரமும் செயல்பட்டு கொண்டிருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு வாா்டும் ெதாடங்கபட்டுள்ளது. பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தும்மல், அறிகுறி இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்