சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-03-05 22:00 GMT
கயத்தாறு, 

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சிறுமி பலாத்காரம் 

கயத்தாறு முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் சந்தனகுமார் (வயது 21). இவர் அங்குள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் காதல் திருமணம் செய்துள்ளார். இவருடைய மனைவி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.

சம்பவத்தன்று சந்தனகுமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஒரு கிராமத்தை சேர்ந்த 6–ம் வகுப்பு பயிலும் 11 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

போக்சோ சட்டத்தில் கைது 

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக மாணவியின் தாயார், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சந்தனகுமாரை கைது செய்தார்.

பின்னர் அவரை கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்