சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.20 கோடியில் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன சிகிச்சை மையம் அமைச்சர் பேட்டி
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.20 கோடியில் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சேலம்,
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மகப்பேறு வார்டு, அவசர சிகிச்சை பிரிவு வார்டு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இதையடுத்து விஜயபாஸ்கர் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு, பிணவறை ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிறப்பு வார்டு
இந்த ஆய்வின் போது அம்மாபேட்டையை சேர்ந்த செல்வன் என்பவர் திடீரென அமைச்சரின் காலில் விழுந்தார். இதையடுத்து அவர், உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தைக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தாய்சேய் நல வார்டில் தினமும் 35 பிரசவம் வரை பார்க்கப்படுகிறது. இங்கு கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
அதிநவீன சிகிச்சை மையம்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.20 கோடியில் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா விரைவில் முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும். ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் புதிய சி.டி. ஸ்கேன் வழங்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு தற்போது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 28 பேர் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம், ரெயில் நிலையங்களில் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ், ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.