நவரசம் அகடாமி பள்ளிக்கூட ஆண்டு விழா
நவரசம் அகடாமி பள்ளிக்கூட ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.;
அறச்சலூர்,
அறச்சலூர் தி நவரசம் அகடாமி பள்ளிக்கூட ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளிக்கூட தலைவர் ஆர்.பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் ஆர்.கார்த்திக் முன்னிலை வகித்தார்.
பள்ளிக்கூட பொருளாளர் டி.கே.பொன்னுவேல், கல்லூரி தலைவர் டிேக.தாமோதரன், செயலாளர் சி.குமாரசாமி, பொருளாளர் சி.பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தாளாளர் அருண் கார்த்தி, கமிட்டி உறுப்பினர் பழனிசாமி, துரைசாமி, பரமசிவம், செல்வராஜ், கருப்பணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிக்கூட மாணவர் சி.வைபவ் வரவேற்று பேசினார். முடிவில் ஏ.சஞ்சனா நன்றி கூறினார்.