கல்லிடைக்குறிச்சி அருகே மினிலாரி–மொபட் மோதல்; 3 பெண்கள் படுகாயம்
கல்லிடைக்குறிச்சி அருகே மினிலாரி–மொபட் மோதிக் கொண்டதில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
அம்பை,
கல்லிடைக்குறிச்சி அருகே மினிலாரி–மொபட் மோதிக் கொண்டதில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
துக்கம் விசாரிக்க சென்றனர்
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகநயினார் மனைவி ஆறுமுகத்தம்மாள் (வயது 36), கல்லிடைக்குறிச்சி பொன்மாநகரைச் சேர்ந்த மாரிசெல்வம் மனைவி சரஸ்வதி (35), தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி ராஜலட்சுமி (32). இவர்கள் 3 பேரும் அம்பையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அயன்சிங்கம்பட்டியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு 3 பேரும் சென்றனர். பின்னர் அங்கு இருந்து ஆறுமுகத்தம்மாள், சரஸ்வதி, ராஜலட்சுமி ஆகியோர் மொபட்டில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். மொபட்டை ஆறுமுகத்தம்மாள் ஓட்டினார். பின்னால் மற்ற 2 பேரும் அமர்ந்து இருந்தனர்.
3 பெண்கள் படுகாயம்
அயன்சிங்கம்பட்டி 4 முக்கு சாவடியில் சென்ற போது, அந்த வழியாக மினி லாரி ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மொபட், மினி லாரி மோதிக் கொண்டன. இதில் ஆறுமுகத்தம்மாள், சரஸ்வதி, ராஜலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.