கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.;

Update: 2020-03-03 23:15 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆஞ்சநேய நகரை சேர்ந்தவர் டேவிட் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பரிமளா (27). இவர்களது மகள்கள் ஸ்பந்தனா (15), நந்தினி ( 9), ரித்விகா (7). மகன் தருண்குமார் (12).

பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தருண்குமார் 7-ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம்போல தருண்குமார் நேற்று பள்ளிக்கு சென்றான். மதிய உணவு இடைவெளிநேரத்தில் சக நண்பர்களுடன் ராதா நகர் கொசஸ்தலை ஆற்றுக்கு சென்றான். அப்போது ஆற்றின் குறுக்கே தடுப்பணையில் இருந்து தேங்கி நின்ற தண்ணீரில் குதித்தான்.

அப்போது ஆழமான பகுதியில் தருண்குமார் சிக்கிக் கொண்டான். இதை பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் விரைந்து சென்றனர். தண்ணீரில் ஆழமான பகுதியில் சிக்கி கொண்ட மாணவனை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தருண்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாணவனின் தந்தை டேவிட் பள்ளிப்பட்டு போலீசில் புகார் அளித்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்