‘ரஜினியால் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது’ வேலூர் இப்ராகிம் பேட்டி
இஸ்லாமிய மதகுருமார்கள் சந்திப்பு விவகாரம்: ‘ரஜினியால் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது’ வேலூர் இப்ராகிம் பேட்டி.;
சேலம்,
தமிழ்நாடு ஏகத்துவ பிரசார இயக்கத்தின் மாநில தலைவர் வேலூர் இப்ராகிம் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த ஒரு முஸ்லிமுக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் சில எதிர்க்கட்சிகள், தேர்தலில் வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம்களிடம் தவறான பிரசாரத்தை பரப்பி போராட்டங்களை தூண்டிவிடுகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள் யாருக்காவது ஒருவருக்கு பாதிப்பு இருக்கிறது என்று நிரூபித்தால் அவர்களுடன் சேர்ந்து நானும் எதிர்ப்பு பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன்.
இந்தியாவில் தேசப்பிரிவினை ஏற்படுத்த சில அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. சென்னை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தவறானது என்பதால் வன்முறையை தூண்டும் வகையில் நடக்கும் போராட்டங்களை நிறுத்தவும், போராட்டங்களில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன்.
குடியுரிமை திருத்த சட்டம் பற்றி ரஜினி குரல் கொடுத்தாலும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவரை இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்து பேசியது கேலிக்கூத்தானது. அவரால் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது. சமீபத்தில் வெளியான திரவுபதி திரைப்படமானது, சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக அமைந்துள்ளது. அனைத்து சமூக மக்களும் அந்த படத்தை பார்க்க வேண்டும். தனுஷ் நடித்த அசுரன் படத்தை பற்றி பேசிய, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரவுபதி படத்தை பார்த்து கருத்து தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவர் வக்கீல் ஏ.பி.மணிகண்டன், விசுவ இந்து பரிஷத் நிர்வாகி ராசி சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.