பெட்ரோல் பங்க் அருகே டயர் கடையில் தீ விபத்து

புதுக்கடை ஜங்ஷன் அருகில் மரியமிக்கேல் என்பவர் டயர் கடை நடத்தி வருகிறார். இந்த கடை பெட்ரோல் பங்கையொட்டி உள்ளது.;

Update: 2020-03-03 21:50 GMT
புதுக்கடை, 

டயர் கடையை நேற்று மாலை பூட்டி விட்டு மரியமிக்கேல் சென்று விட்டார். இரவு 7 மணி அளவில் அந்த கடையில் திடீரென்று தீப்பிடித்தது.

அருகில் பெட்ரோல் பங்க் இருந்ததால், பதறிப்போன பொது மக்கள், உடனே குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தீயை அணைக்கும் முயற்சியில் பொது மக்களும் ஈடுபட்டனர். இந்த நிலையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. விபத்து குறித்து புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்