மறைமலைநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 4 பேர் சிறையில் அடைப்பு

மறைமலைநகரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.;

Update: 2020-03-03 22:15 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சுற்றுப்புறப் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த உத்தரமேரூர் தோட்ட நாவல் கிராமத்தை சேர்ந்த எழில் என்கிற எழிலரசன் (வயது 30), காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த பூச்சி என்கிற ரத்தினசபாபதி (25), குட்டி என்கிற முருகன் (27), காவனூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த விமல் (27) ஆகிய 4 பேரையும் மறைமலைநகர் போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஜான் லூயிஸ், கைது செய்யப்பட்ட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்