கோவில் வளாகத்தில் மரத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

வியாசர்பாடியில் உள்ள கோவில் வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-03-03 22:30 GMT
பெரம்பூர்,

வியாசர்பாடி பி.வி.காலனி 1-வது தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற பீலி முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தின் அருகே உள்ள மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப் பதாக நேற்று அதிகாலை பொதுமக்கள் எம்.கே.பி.நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, மரத்தின்கீழ் அந்த வாலிபரின் செல்போன், லேப்-டாப் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் இருந்தது.

அதை போலீசார் எடுத்து சரிபார்த்தபோது, அந்த வாலிபர் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரைச் சேர்ந்த பரிமனம் (வயது 26) என்பது தெரியவந்தது.

மேலும், அவர் என்ஜினீயரிங் படித்து விட்டு, சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதும் உறுதியானது.

இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்