நெல்லை மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் இடமாற்றம் கலெக்டர் உத்தரவு

வருவாய் துறையில் ஓராண்டு பணி முடித்த தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-03-03 22:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறையில் ஓராண்டு பணி முடித்த தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:–

சேரன்மாதேவி தாசில்தார் சந்திரன் நெல்லை டாஸ்மாக் உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) மாற்றப்பட்டுள்ளார். இந்த பணியில் இருந்த சுப்புராயலு, திசையன்விளை தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

நாங்குநேரி தாசில்தார் ரகுமத்துல்லா, அங்கேயே ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாரக மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட வழங்கல் அலுவரின் நேர்முக உதவியாளர் பகவதி பெருமாள் நெல்லை தாசில்தாராக மாற்றப்பட்டார். அங்கிருந்த தாசில்தார் ராஜேசுவரி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டார். திசையன்விளை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கனகராஜ் சேரன்மாதேவி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாங்குநேரி ஆதிதிராவிடல் நல தனி தாசில்தார் நடராஜன் சேரன்மாதேவி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கிருந்த நல்லையா நாங்குநேரி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர துணை தாசில்தார் அந்தஸ்தில் பணிபுரிந்த 6 பேர் நீதிபரிலாபன பயிற்சி முடித்த பிறகு பல்வேறு பணிகளுக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை கலெக்டர் அலுவலக ‘கே’ பிரிவு தலைமை உதவியாளர் முருகேசுவரி அதே பணியிடத்திலும், நாங்குநேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயா அதே பணியிடத்திலும், ஆலங்குளம் மண்டல துணை தாசில்தார் ஆவுடையப்பன் நாங்குநேரி மண்டல துணை தாசில்தாராகவும், திருவேங்கடம் வட்ட வழங்கல் அலுவலர் அரிகர சுப்பிரமணியன் மானூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், நெல்லை கலெக்டர் அலுவலக வரவேற்பு பிரிவு துணை தாசில்தார் மாணிக்க வாசகம் கலெக்டர் அலுவலக ‘ஒள’ பிரிவு தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். சேரன்மாதேவி மண்டல துணை தாசில்தார் வள்ளி நாயகம், நெல்லை கலெக்டர் அலுவலக வரவேற்பு பிரிவு துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்