நெல்லை அருகே பிரபல கொள்ளையன் கைது போலீசாரை கண்டதும் தப்பி ஓடியதால் சிக்கினார்
நெல்லை அருகே போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
நெல்லை,
நெல்லை அருகே போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
மடக்கிப்பிடித்தனர்
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். ஓரிடத்தில் போலீசார் ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென்று ஓட்டம் பிடித்தார்.
இதை கண்டதும் போலீசார் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக அந்த வாலிபரை சிறிது தூரம் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர்.
கொள்ளையன் கைது
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள முத்தம்மாள்புரத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவருடைய மகனான பிரபல கொள்ளையன் செல்வராஜ் (வயது 26) என்பது தெரியவந்தது. இவர் மீது கொள்ளை, அடிதடி மற்றும் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து செல்வராஜை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் கங்கைகொண்டான் பகுதியில் வழிப்பறி மற்றும் வீடுகளில் கைவரிசை காட்டினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.