குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மாரியம்மன் கோவிலில் கடையடைப்பு வணிகர்கள் உண்ணாவிரதம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மாரியம்மன்கோவிலில் கடையடைப்பு செய்த வணிகர்கள் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.

Update: 2020-03-02 23:30 GMT
சாலியமங்கலம்,

தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்தநிலையில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மாரியம்மன் கோவில் பகுதியில் கடையடைப்பு நடைபெற்றது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

உண்ணாவிரதம்

மேலும் வணிகர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். வணிகர் சங்க தலைவர் வி.அன்பு வரவேற்று பேசினார். உண்ணாவிரதத்தில் தஞ்சை மாவட்ட வணிகர் சங்கம் தலைவர் கணேசன் தி.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சன்.ராமநாதன், திராவிட கழக மாவட்ட தலைவர் சி.அமர்சிங், இந்திய கம்யூனிஸ்டு் கட்சி மாவட்ட செயலாளர் மு.வ.பாரதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வணிகர் சங்க செயலாளர் லாரன்ஸ் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்