எலக்ட்ரிக் ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்தபோது மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பலி
எலக்ட்ரிக் ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்தபோது மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பலியானார்.
தஞ்சாவூர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் தருமர். இவருடைய மகன் காளிமுத்து(வயது 27). இவர், கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் துறையில் இரண்டாம் நிலை காவலராக சேர்ந்தார். மதுரையில் பயிற்சி முடித்த பிறகு 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தஞ்சை ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தார்.
இங்கு போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகத்தில் கணினி இயக்குபவராக பணியாற்றி வந்தார். தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில் காளிமுத்து தங்கியிருந்தார். நேற்று காலை குளிப்பதற்காக வாளியில் தண்ணீரை நிரப்பி எலக்ட்ரிக் ஹீட்டர் மூலம் வெந்நீர் தயார் செய்து கொண்டிருந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
தண்ணீர் சுட்டுவிட்டதா? என பார்ப்பதற்கு கையை வாளிக்குள் விட்டார். அப்போது தவறுதலாக எலக்ட்ரிக் ஹீட்டர் மீது அவரது கை பட்டு விட்டது. அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அந்த இடத்திலேயே அவர் பலியானார்.
வழக்கமாக காலை 7 மணிக்கு காளிமுத்து பணிக்கு சென்று விடுவார். நேற்று வழக்கம்போல் பணிக்கு வராததால் சக போலீஸ் நண்பர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்டனர். அழைப்பு தொடர்ந்து சென்றதே தவிர செல்போனை எடுத்து அவர் பேசவில்லை.
கதவை உடைத்து உள்ளே சென்று...
தொடர்ந்து 8.30 மணி வரை தொடர்பு கொண்டபோதும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் காளிமுத்து குடியிருக்கும் வீட்டின் பக்கத்தில் குடியிருப்பவர்களை செல்போன் மூலம் சக போலீஸ் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசியபோது வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது குளியல் அறையில் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் காளிமுத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து எலக்ட்ரிக் ஹீட்டர் சுவிட்சை அணைத்து விட்டு காளிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில், மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பலியான சம்பவம் சக போலீஸ்காரர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.