உணவு, இடம் இன்றி ஓமன் நாட்டில் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் சென்னை திரும்பினர்
உணவு, தங்க இடம் இன்றி ஓமன் நாட்டில் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள், தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னை திரும்பி வந்தனர்.;
ஆலந்தூர்,
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யாசாமி, சுருட்டையா கலியன், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதிவாணன், அண்ணாதுரை, கண்ணன், பாலகிருஷ்ணன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா சுப்பிரமணி, லோகநாதன், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், தூத்துக்குடியைச் சேர்ந்த முருகபெருமாள் ஆகிய 11 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓமன் நாட்டுக்கு கூலி வேலைக்கு சென்றனர்.
ஆனால் இவர்கள், கடந்த 6 மாதங்களாக ஓமன் நாட்டில் சரியான வேலை இல்லாமலும், குறைவான சம்பளத்தில் தங்க இடமின்றி, உணவு இல்லாமலும், அதிக வேலைப்பளு உள்ளிட்டவைகளால் பரிதவிப்பதாக பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது.
இந்த வீடியோவை பார்த்த தமிழக அரசின் வெளிநாட்டுவாழ் தமிழர் நல ஆணையரக இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இதுபற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அவரது உத்தரவின்பேரில் வெளிநாட்டு வாழ் தமிழர் நல ஆணையரகத்தின் மூலம் ஓமனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் இந்திய தூதரக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்களையும் மீட்டனர். பின்னர் தமிழக அரசு சார்பில் 11 பேருக்கும் விமான டிக்கெட் வழங்கப்பட்டது.
இதையடுத்து 11 தொழிலாளர்களும் ஓமனில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்தனர். விமான நிலையத்தில் தமிழக அரசின் வெளிநாட்டு வாழ் தமிழர் நல ஆணையரக இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், உதவி கமிஷனர் ரமேஷ் ஆகியோர் 11 பேரையும் வரவேற்றனர்.
பின்னர் 11 பேரும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வாகன வசதியும் செய்து தரப்பட்டது.
அப்போது வெளிநாட்டு வாழ் தமிழர் நல ஆணையரக இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2019-ம் ஆண்டில் வெளிநாட்டில் பாதிக்கப்பட்ட 193 பேருக்கும், 2020-ம் ஆண்டில் இதுவரை 22 பேருக்கும் தாயகம் திரும்ப உதவி செய்து உள்ளோம். வெளிநாட்டு வேலைக்காக செல்பவர்களுக்காக அரசின் சார்பில் 400 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.
வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சிகள் உரிய உரிமம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவும், ஏஜென்சி உரிமத்தை வைத்து தவறு செய்தால் அதை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் திரும்பிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி கூறும்போது,‘‘ரூ.80 ஆயிரத்தை கட்டி ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்றோம். அங்கு நாங்கள் உணவு, தங்க இடம் இன்றி கஷ்டப்பட்டதை அறிந்து தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் எங்களை தமிழக அரசு மீட்டு உள்ளது. எங்களைபோல் வேறு யாரும் பாதிக்காத வகையில் மதுரையில் உள்ள ஏஜென்சிகள், அவர்களின் தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
விழுப்புரத்தை சேர்ந்த முருகன் கூறும்போது, ‘‘சாப்பாடு, தங்க அறை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்களை மீட்ட தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். 4 மாத சம்பளம் பாக்கி உள்ளது. அதை மீட்டு தரவேண்டும்’’ என்றார்.