மராட்டியத்தில் ஆட்சி அமைத்து உள்ள மகா விகாஷ் அகாடி கூட்டணி உடையாதது ஏன்? துணை முதல்-மந்திரி அஜித்பவார் ருசிகர விளக்கம்
மராட்டியத்தில் ஆட்சி அமைத்து உள்ள மகா விகாஷ் அகாடி கூட்டணி ஏன் உடையவில்லை? என்பதற்கு துணை முதல்-மந்திரி அஜித்பவார் ருசிகரமாக விளக்கம் கொடுத்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக பாரதீய ஜனதா உடனான கூட்டணியை முறித்து கொண்ட சிவசேனா, கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ளது.
ஆனால் இந்த கூட்டணி ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது என பாரதீய ஜனதா தலைவர்கள் ஆரூடம் கூறி வருகிறார்கள். ஆனால் 3 கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசு தனது 5 ஆண்டுகாலத்தையும் பூர்த்தி செய்யும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் பதிலடி கொடுத்தனர்.
இந்த நிலையில், நேற்று மும்பையில் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்து கொண்டு பேசினார். அப்போது மகா விகாஷ் அகாடி கூட்டணி உடையாமல் வலுவுடன் இருப்பதற்கு துணை முதல்-மந்திரி அஜித் பவார் புதுவிளக்கம் கொடுத்தார்.
அவர், ‘மகா விகாஷ் அகாடி கூட்டணி சுவரில் எப்போது விரிசல் உருவாகும் என சிலர் பேசுகிறார்கள். ஆனால் இந்த கூட்டணி ஏன் உடையவில்லை? இது அம்புஜா, ஏ.சி.சி. மற்றும் பிர்லா சிமெண்ட் ஆகியவற்றால் ஆனது. அதனால் இது எப்படி உடையும்’ என்று டி.வி.யில் ஒளிபரப்பாகும் சிமெண்டு விளம்பரத்தை மிமிக்ரி செய்து பேசினார்.
அஜித்பவாரின் இந்த பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை உண்டானது.