ரோடியர் மில்லை மூடும் அறிவிப்பினை ரத்து செய்யவேண்டும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

ரோடியர் மில்லை மூடும் அறிவிப்பினை ரத்துசெய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

Update: 2020-03-01 23:34 GMT
புதுச்சேரி,

புதுவை அனைத்து பஞ்சாலை தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் அபிசேகம் தலைமை தாங்கினார். அனைத்து சங்க செயலாளர் மோகன்தாஸ், பொருளாளர் ஜெயபாலன், துணைத்தலைவர்கள் ஞானசேகரன், பாப்புசாமி, அண்ணா அடைக்கலம், இளங்கோவன், குணசேகரன், கபிரியேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ரத்து செய்ய...

ரோடியர் மில்லை மூடுவது என்ற அறிவிப்பினை ரத்துசெய்ய வேண்டும். எந்தவகையிலும் சுற்றுச்சூழலை பாதிக்காமல் இருந்துவரும் ரோடியர், பாரதி, சுதேசி மில்களை மூடுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது. விரும்பும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு எஞ்சியுள்ள தொழிலாளர்களையும், அவர்களுடன் சுதேசி, பாரதி, ரோடியர் மில்களில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரமில்லாமல் பணிபுரியும் 350 தொழிலாளர்களையும் வைத்துக்கொண்டு மில்லை இயக்குவதாக அரசு கூறுகிறது. கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி இது சம்பந்தமாக புதுவை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ரோடியர் மில்லின் கட்டிடங்களில் உள்ள சிறுசிறு பழுதுகளை சரிசெய்து மறுகட்டமைப்பினை உருவாக்கி புதிய எந்திரங்களை பொருத்தி மில்லை இயக்க வேண்டும். அதேபோல் சுதேசி, பாரதி மில்களை தலா ரூ.200 கோடியில் நவீனப்படுத்த வேண்டு்ம்.

மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்