கடையநல்லூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ்–2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

கடையநல்லூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ்–2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2020-03-01 22:00 GMT
அச்சன்புதூர், 

கடையநல்லூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் பிளஸ்–2 மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பிளஸ்–2 மாணவி 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் மேல தெருவை சேர்ந்தவர் ராமர். அவருடைய மகள் கஸ்தூரி (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக கஸ்தூரிக்கு நெஞ்சு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக நீண்ட நாட்கள் மருத்துவம் பார்த்த நிலையில் மனமுடைந்த கஸ்தூரி நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அச்சன்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கஸ்தூரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்–2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூதாட்டி 

இதேபோல் இலத்தூர் காந்தி காலனியை சேர்ந்தவர் ஈஸ்வர கனி மனைவி ரத்தினம் (75). இவர் அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்