மதுரைக்கு இன்று வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாடு
மதுரைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாக அமைச்சர்கள் செல்லூர்ராஜூ,ஆர்.பி.உதயகுமார் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மதுரை,
மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிங் செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார். அவர் வழியில் தற்போது முதல்-அமைச்சரும் விளையாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சமீபத்தில் சேலத்தில் கிரிக்கெட் மைதானத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கித் தந்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரைக்கு இன்று (ஞாயிற்றுக் கிழமை) வரும் அவருக்கு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவையின் சார்பில் பூர்ண கும்ப மரியாதை, கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்டவையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
காலை 7 மணிக்கு விமான நிலையத்திலும், அதை தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் கப்பலூர் டோல்கேட், திருமங்கலம் நகரம், மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, கள்ளிகுடி ஆகிய 5 பகுதிகளில் மிக சிறப்பான முறையில் எழுச்சிமிகு வரவேற்பை முதல்-அமைச்சருக்கும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதல்-அமைச்சருக்கும் அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகர வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக வரலாற்றில் 11 மருத்துவக்கல்லூரிக்கு புதிதாக அனுமதி பெற்று சாதனை படைத்துள்ளார். மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மக்கள் திரளாக பங்கு பெறும் வகையில் விரகனூர் சந்திப்பில் இன்று காலை 7 மணி அளவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளும்படி வேண்டுகிறோம். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழாவிற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் பெருங்குடி சந்திப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.